🕊️ புறா (மத்தேயு 10:16)-இது சமாதானத்தின் சின்னம். போட்டி, பொறாழை சூது, வாது, கோபம் மட்டுமல்ல; பித்த சுரபியும் இல்லாத பறவை!
🦅ககுகு (ஏசாயா 40:31) - இது உயர பறக்கையில் பார்வையின் திறன் அதிகமாவதைப் போல, நாம் கர்த்தரோடு நெருங்க, நெருங்க எண்ணம், நோக்கம், செயல் எல்லாமே உயர்ந்து வளருகிறது.
🐦⬛காகம் (சங்கீதம் 147:9) - இது வேதத்தில் முதலில் குறிப்பிடப்பட்ட பறவை. பகுத்துண்ணல், கூட்டமாய் வாழ்தல் இவற்றின் குணமாதலால் மனிதர்களுக்கு
இது முன் மாதிரியே!
🐓சேவல் (சங்கீதம் 91:4) - அதிகாலை எழும்பி கூவுவதும் நாம் ஆண்டவரை தேடவும், இரை கிடைத்தவுடன் தன் துணையோடு உண்ணுவதும் நாம் சேவலிடம் கற்றுக்கொள்ளும் பாடமே!
🦩கொக்கு (எரேமியா 8:7) - ஏற்ற இரை கிடைக்கும் வரை குளக்கரையில்
ஒற்றை காலில் நிற்பதைப் போல, நாமும் அபிஷேகம் கிடைக்கும் வரை கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுதல் சிறந்ததுதானே!!