❤️அன்பைக் கடன்கொடுங்கள்; அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்.
🤝விட்டுக்கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்; தட்டிக்கொடுங்கள்; தவறுகள் குறையும்; மனம் விட்டுப்பேசுங்கள்; அன்பு பெருகும்.
☺️ சிரித்துப் பாருங்கள்; உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும்; பிறரை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
👴🏻வசதிக்கு மரியாதை கொடுக்காதீர்கள்; வயதுக்கு மரியாதை கொடுங்கள்; வசதி எல்லோருக்கும் வருவதில்லை - ஆனால் முதுமை எல்லோருக்கும் வரும்.
⏳ நம்மை நேசிப்பவர்களை நேசித்தாலே, வெறுப்பவர்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்காது.
😇 தேவையற்றவர்களோடு, தேவையற்றதைப் பேசி தேவ பிரசன்னத்தை இழந்து போவதைவிட தேவையானவர்களிடம், தேவையானதைப் பேசி தேவ பிரசன்னத்தை காத்துக் கொள்வோம்.
👍🏻 "அன்புப் பிள்ளைகளே! கடைப்பிடிப்போமா?"