👩🏻🍼 தமிழ் மொழியின் முதல் எழுத்து அ;
தாய் (அம்மா) முதல் எழுத்து அ;
மனிதர்கள் மட்டுமல்ல ஐந்தறிவு உள்ள விலங்குகளும் கூட பிறந்தவுடன் அம்மா என்பதை "மா" என்று தானே அழைக்கிறது. இதிலிருந்து அன்னையின் அருமையை அறிந்து கொள்ளலாமல்லவா!
👩🏻🍼 அன்னையின் சிறப்புகள் சில:👩🏻🍼
👩🏻🍼அ ன்புக்கோர் உறைவிடம் அன்னை.
👩🏻🍼ஆ தரித்து வழிநடத்துவதும் அன்னை.
👩🏻🍼 இ ன்னலின் போது உறுதுணையும் அன்னை.
👩🏻🍼ஈ டு இணையில்லா பாசமழை பொழிவதும் அன்னை.
👩🏻🍼உ ண்மையான நேசத்தோடிருப்பதும் அன்னை.
👩🏻🍼ஊ ரே வெறுத்தாலும் தேற்றுவதும் அன்னை.
👩🏻🍼எ ல்லை இல்லா அன்பு செலுத்துவதும் அன்னை.
👩🏻🍼ஏ ற்றமிகு துணையாயிருப்பதும் அன்னை.
👩🏻🍼ஐ யமின்றி அணைத்துக் கொள்வதும் அன்னை.
👩🏻🍼ஒ ற்றுமையை உணர்த்துவதும் அன்னை.
👩🏻🍼ஓ ங்கி வளர தன்னை தியாகம் செய்பவளும் அன்னை.
👩🏻🍼 இ ஃ து அனைத்துமே அன்னைக்கு மட்டுமே பொருந்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை தானே!
😇 "உன் தாயின் போதகத்தை தள்ளாதே!"
(நீதிமொழிகள் 6:20)