🗣️ ஊழியம் செய்ய:
யாரும் இதுவரை போகாத இடம், யாரும் இதுவரை சந்திக்காத ஜனம், யாரும் இதுவரை செய்யாத செயல் எது என அறிந்து சத்தியம் சொல்லுவோம்.
❤️ தேவன் நமக்கு செய்தது, செய்கிறது, செய்யப் போகிறது எல்லாமே நம்மை அவர் நேசிப்பதால் தானே!
💪🏻உடலில் அவயவங்கள் இருப்பதை போல, சபை என்ற சரீரத்திற்கும் விசுவாசிகள் அவயவங்களே!
🔋 பேட்டரியை சார்ஜ் ஏற்றி உபயோகிப்பதை போல, ஆவிக்குரிய சார்ஜ் ஏற்ற ஆண்டவரின் சமூகம் தான் சிறந்தது.
🌎 நாம் : உலகத்தையே பார்த்தால் துன்பம், நம்மையே பார்த்தால் சோர்வு, தேவனையே பார்த்தால் இளைப்பாறுதல்.
🌊 ஓடும் தண்ணீரைப் போல் செய்யுங்கள் நன்மையை! குப்பை போல் ஓரத்தில் ஒதுங்கிவிடும் தீயவை!
🔑 சாவியைத் தேடி அலைந்தேன். எங்கும் கிடைக்காமல் தவித்தேன். களைத்து போய் தொட்ட போது தான் தெரிந்தது கதவு பூட்டப்படவில்லை என்பது! தடைகள் இருப்பது நம் மனதில் தான்.
📖 நம் வாழ்க்கையை மாற்றவே வேதாகமம்! நம் அறிவை அதிகப்படுத்தல்ல!