பலிபீடம்



பலிபீடம் என்பது:

பகட்டான இடமல்ல; நம்மை பலி செலுத்தும் இடம்.


கவர்ச்சிகரமான இடமல்ல; கண்ணீர் சிந்தும் இடம்.


பரவசத்தோடு அல்ல; பரிசுத்த அலங்காரத்தோடு கர்த்தரை தொழுது கொள்ளும் இடம்.


சிரிக்க வைக்கும் இடமல்ல; வேத வசனம் மூலம் நம்மை சீர்படுத்தும் இடம்.


பொழுதுபோக்கு இடமல்ல; நம்மை பண்படுத்தும் இடம்.


கொண்டாட்ட மையம் அல்ல; தேவன் வாசம் பண்ணும் இடம்.


பலிபீடத்திலிருந்து பரிசுத்த அக்கினி புறப்பட வேண்டும்.


பலிபீடத்திலிருந்து நம்மை சுத்திகரிக்கும் ஜீவ வார்த்தைகள் புறப்பட வேண்டும்.


சிலுவை என்னும் பலிபீடத்தில் இயேசு பலியிடப்பட்ட போது செங்குருதி வழிந்தது.


தேவ பிள்ளைகளே! நாம் தேவனுடைய ஆலயம்; நமது பலிபீடம் எப்படி இருக்கிறது?