குடும்ப ஜெபம்


குடும்ப ஜெபம்


வாழ்க்கையில், தேவபிள்ளைகளுக்கு,

குடும்ப ஜெபம் என்பது; அவசியமானது- அத்தியாவசியமானது,

ஆசீர்வாதமானது-தேவையானது.


குடும்ப ஜெபம் இல்லாத வீடு

கூரையில்லாத வீடு, அச்சாணியில்லாத சக்கரம், சக்கரமில்லாத வண்டி.


குடும்பம் ஓங்கி வளர பணம், பொருள் மட்டும் போதாது.


குடும்பத்தில் ஜெபம், கடவுள்பயம், பிறருக்கு உதவுதல், அன்பு பாசம்,

ஒருமனம் இருந்தாலே குடும்பம் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.


பழைய பாடல் ஒன்று:வரப்பு உயர நீர் உயரும்- நீர் உயர நெல் உயரும்.

நெல் உயர குடி உயரும்- குடிஉயர கோன் உயரும்.


அது போல


ஜெபம் உயர குடும்பம் உயரும்.

குடும்பம் உயர திருச்சபை உயரும் திருச்சபை உயர தேசமே உயரும். இது முற்றிலும் உண்மை தானே!


நம் வீடுகளில் குடும்ப ஜெபம் இல்லையெனில் அது ஆசீர்வாதத்திற்கு தடை தானே!


பெற்றோர் பிள்ளைகளுக்கு வைத்துப் போகும் மிகப்பெரிய சொத்து தேவ பக்தியே!


தேவ பக்தியை பிள்ளைகளுக்கு ஊட்டும் வழி குடும்ப ஜெபமே!


குடும்ப ஜெபம் குடும்பத்தை இணைத்துக்கட்டும் பாலமே!


ஆகவே குடும்ப ஜெபம் செய்ய,

முயற்சிப்போம்-முடிவெடுப்போம்.

செயல்படுத்துவோம் ஆசீர்வாதத்தை பெறுவோம்.