📌 நெருக்கம் 📌



📌 உலகில் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் நெருக்கங்கள் வருவது சகஜமே.


📌 எவைகளால்?

மனிதர்களால் நெருக்கம்;

பணத்தினால் நெருக்கம்; வியாதியால் நெருக்கம்; குடும்பத்தால் நெருக்கம்; கடன் தொல்லையால் நெருக்கம்; கர்த்தரை விட்டு விட்டாலும் நெருக்கம் தான்.


📌 மேலும்

நெருக்கம்: தூக்கத்தைக் கெடுக்கிறது, மன நிம்மதியை கெடுக்கிறது, மனமகிழ்ச்சியைக் கெடுக்கிறது; மன சமாதானத்தைக் கெடுக்கிறது; உணவையும் கூட குறைத்து விடுகிறது.


📌 ஆனாலும்

நம் நினைவுகளை அறிந்தவர் அவர், நம் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்தவர் அவர், நம் பெருமூச்சின் அர்த்தத்தையும் கூட அறிந்தவராயிற்றே நம் அப்பா!


📌 ஆகவே,

நெருக்கங்கள் நெருக்குகையில் நெருக்கமானவரோடு நெருங்கி விடுங்கள்.


📌 மரணம் நம்மை நெருங்கும் முன் மரணத்தை ஜெயித்தவரிடம் (இயேசு) நாம் நெருங்கி விட வேண்டும்.


📌 என் நெருக்கத்திலே கர்த்தரை....

சங்கீதம் 120: 1