பெற்றோர்களே! கற்றுக்கொடுங்கள்




1. உழைத்து சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காமல் பெற்ற 5 டாலரை விட மதிப்புள்ளது என கற்றுக்கொடுங்கள்.


2. தோல்வியை ஏற்கவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள்.


3. எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என புரிய வையுங்கள்.


4. ஏமாற்றுவதை விட, தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என உணரச் செய்யுங்கள்.


5. தன்னம்பிக்கையோடு சுயமாய் செயல்படும் தைரியத்தை கற்றுக்கொடுங்கள்.


6. கும்பலாக வந்து கூச்சலிட்டாலும், நியாயத்தை மட்டுமே நிலைநாட்ட கற்றுக்கொடுங்கள்.


7. சலுகை காட்டி, மற்றவர்களை சார்ந்திருக்க இடம்கொடாதிருங்கள். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டுமே பயனுள்ளதாகிறது.


8. தவறு கண்டால் யாராயிருப்பினும் துணிச்சலோடு சுட்டிக்காட்ட கற்றுக்கொடுங்கள்.


9. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை அன்புடன் அழகாக வழிநடத்துங்கள்.


10. அதைவிட இவை அனைத்தையும் பொறுமையாய் படித்து, செயல்படுத்துங்கள் பெற்றோரே!