யாருக்காக சிலுவை

உலக வரலாற்றிலேயே அதிமுக்கியமான நாள் ஒன்று உண்டென்றால் அது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் தான்!


இந்த நாள் கர்த்தருடைய பெரிய தியாகம், பெரிய அன்பு, பெரிய கிருபையை வெளிப்படுத்துவதால் தான் பெரிய வெள்ளி என அழைக்கிறோம்.


பாரமிக்க சிலுவையை தோளில் சுமத்தி, கோரமான ஈட்டியால் விலாவில் குத்தி, முள் முடியை தலையில் சூட்டி, உடலில் உள்ள உதிரம் அனைத்தையும் சிந்தி,


இது மட்டுமல்ல;


நடந்து வந்த பாதையில் 3 முறை கீழே விழுந்து, சரீரத்தில் 5480 காயங்களை ஏற்படுத்தி, தலையை 17 முட்கள் கிழித்து, உடலில் உள்ள 6.5 லிட்டர் இரத்தம் வெளியேறி, 150 கிலோ எடையுள்ள சிலுவையை தூக்கி, இதைவிட_ _ _ _ _ _


பாரமான சிலுவை என்று இறக்கி வைத்து விடவில்லை, கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை, குருதி சிந்தி பாடுபட்டும் மறுதலிக்கவில்லை, மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. யாருக்காக? யாருக்காக? சற்று சிந்திப்போமா!


இயேசு,

பிதாவே _ _ _ _ _ _ ஜீவனை விட்டார். லூக்கா 23:46