பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு  


📖 தேவப் பிள்ளைகளுக்கு தேவன் அமைத்துக் கொடுத்த 66 அறைகளைக் கொண்ட  அதிசய அரண்மனை தான் வேத புத்தகம்.


📖 Do it என்பது பழைய ஏற்பாடு;

Believe it என்பது புதிய ஏற்பாடு.


📖 பழைய ஏற்பாடு - Do (செய்) என்று சொல்வது;

புதிய ஏற்பாடு - Done செய்து முடித்தாயிற்று என்று சொல்கிறது.


📖 பழைய ஏற்பாடு - ஒருவரை மட்டும் ஆசாரியனாக்கியது;

புதிய ஏற்பாடு - ஒவ்வொருவரையும் ஆசாரியனாக்கியது.


📖 பழைய ஏற்பாடு - பரிசுத்தமாக்கி அழைத்தார்; 

புதிய ஏற்பாடு-நம்மை அழைத்து பரிசுத்தமாக்கினார்.


📖 பழைய ஏற்பாடு-வாழ்க்கையில் வாக்கைக் கொடுத்தார்;

புதிய ஏற்பாடு-நமக்கு வாக்கையே வாழ்வாக்கினார்.


📖 பழைய ஏற்பாடு-ஜனங்கள் அவர் நிழலில் வாழ்ந்தார்கள்;

புதிய ஏற்பாடு-நாம் அவர் நிஜத்தில் வாழ்கிறோம்.