சிந்தனைக்கு



1. உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப்படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப்படுகிறோம்.

நேர்மையாய் இருப்பதால்தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்.


2. கஷ்டங்களை நினைத்தால் வாழமுடியாது; கவலைகளை நினைத்தால் தூங்க முடியாது.


3.எது வந்தாலும் ஏற்றுக்கொள்.

எது போனாலும் விட்டு விடு ஏனெனில் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.


4. பிடித்த மனிதரோடு சிரித்துப் பேசு, பிடிக்காத மனிதரோடு சிந்தித்துப் பேசு.


5. வேண்டுதல் செய்யும் உதடுகள்; உதவி செய்யும் கரங்கள்;

எதிரியை நேசிக்கும் இதயம் ; இவைகளை நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார்.


6. யார் மனதையும் புண்படுத்தி விடாதீர்கள்; ஏனெனில் ஒருவேளை அதுவே கடைசி சந்திப்பாககூட இருக்கலாம்.


7. வாழ்க்கை "நேசத்தை" கற்றுத் தருகிறது. அனுபவம் யாரை *"நேசிக்க வேண்டும்" என்பதை கற்றுத்தருகிறது. சூழ்நிலை உங்களை "யார் நேசிக்கிறார்கள்" என்பதை கற்றுத்

தருகிறது.


8. தேவைகளையும், ஆசைகளையும் அதிகமாக்கிக் கொள்ளாதீர்கள்.

அப்படிப்பட்ட வாழ்க்கை கசக்கவே செய்யும்.


வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை போடாதீர்கள். உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால், ஒருதுளி எண்ணெயை மூழ்கடிக்க முடிவதில்லை.


உபயோகித்து, உடைத்து, உதாசினப்படுத்தி, தூக்கி எறிந்தோர் முன்பாக, உருவாக்கி, உபயோகித்து, தூக்கி நிறுத்துவார், தூணாக உன்னை! கலங்காதே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்.