காகத்தின் சிறப்பு



காகம் என்றாலே திருடித்தின்னும் பறவை என எண்ணுகிறோம். ஆனால் அதே காகத்தை தேவன் எப்படி எல்லாம் பயன்படுத்தியுள்ளார் பாருங்களேன்:


1. தம் பிள்ளையான எலியாவை போஷிக்க கர்த்தர் நியமித்தது காகங்களை தானே!


2. ஆகாப் ராஜாவால் தேடப்பட்ட எலியா இருக்குமிடம் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது விரட்டி போனாலும் பிடிக்க முடியாத காகங்கள் தானே!


3. கொடுத்த பொறுப்பை நேர்த்தியாய் (அதாவது) அப்பமும், இறைச்சியும் தவறாமல் கொடுத்தது காகங்கள் தானே!


4. எலியாவின் சரியான முகவரியை கர்த்தரிடமிருந்து பெற்று பணியை செய்து முடித்தது காகங்கள் தானே!


5. பறித்துப்போகிற பழக்கத்தை உடையது பசியாற்றுகிறதாய் மாறி பயன்பட்டது காகங்கள் தானே!


ஆகவே, நாமும் கூட நம் வாழ்வில் கர்த்தரின் சித்தத்தை தேவ திட்டத்தை அறிந்து செயல்படும் போது, நம்மையும் தகுதி பார்க்காது பயன்படுத்த வல்லமை உள்ளவர் நம் கர்த்தர்!!