புத்தாண்டு 2023

💥 நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கும் நேரம்.....💥

🎉🎊 அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎊🎉


தேவ பிள்ளைகளே!


🌟ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம், ஆராதனையிலும் ஆர்வத்தோடு பங்கெடுக்கலாம், சுவிசேஷம் அறிவிப்பதில் சுறுசுறுப்பாய் இருக்கலாம், பாடல் ஊழியத்திலும் பங்கு பெறலாம், கிராம ஊழியத்தற்காய் ஓடி ஓடி உழைக்கலாம், சிறுவர் ஊழியத்தையும் சீராய் நடத்தலாம், வாலிபர் வழுக்கி விழுந்து விடாதபடி வழி வகுக்கலாம், ஊழியத்திற்காய் உதாரத்துவமாய் கொடுக்கலாம், காணிக்கையும் கூட

கணக்கு பார்க்காமல் போடலாம். எல்லாமே பிரயோஜனம் தான்.


ஆனாலும்,


🌟 கிறிஸ்துவின் சாயல் நம்மிடம் காணப்படுகிறதா? உலகிற்கு இயேசுவை பிரதிபலித்து காட்டுகிறோமா? குடும்பத்தில் சாட்சி இருக்கிறதா? சபையில் அனைவரிடமும் அன்பு, ஐக்கியமாய் இருக்கிறோமா? எல்லாவற்றிலும் உண்மையா or மாய்மாலமா? ஆண்டவரை பிரியப்படுத்துகிறோமா or மனுஷரையா?

சற்று சிந்திக்கலாமே!


🌟எல்ல நற்குணங்கள் நம்மிடம் காணப்பட்டாலும் கிறிஸ்தவம் என்பதற்கு முதல் அடையாளமான தாழ்மை,பரிசுத்தம், அன்பு நம்மில் காணப்படுகிறதா? சிந்தித்துப் பார்ப்போம் - நம்மையே சீர்தூக்கி பார்க்கலாம். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தலாமே!


🌟 இந்த புதிய வருடத்திலும் கூட புது மனிதர்களாய், பழையன களைந்து, புதியன புகுத்துவோம்!


"பழையவைகள்_ _ _ _ _ _ _ _ _ புதிதாயின"

(II கொரி 5:17)