ஏன்? ஏன்? ஏன்?


1.நீ போகும் பாதையை முழுமையாய் அறிவேன். உன் பயணத்தில் முன்னேறிச் செல்ல தடுமாற்றம் ஏன்?


2. என் உள்ளங்கையில் நீ பத்திரமாய் இருக்கிறாய். உன் வாழ்க்கையில் துணிந்து செல்ல பயம் ஏன்?


3. நீ அனாதை அல்ல -அனாதி தேவனின் செல்லப்பிள்ளை. உன் அங்கீகாரத்தில் குழப்பம் ஏன்?


4. நிச்சயமாகவே முடிவு உண்டு - நம்பிக்கை வீண் போகாது. உன் விசுவாசத்தில் தளர்ச்சி ஏன்?


5. நான் உன்னை முழுமையாக புரிந்து கொள்ளும்போது. பிறர் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை ஏன்?


6.உன்னோடு, உனக்குள், உனக்காக நானிருக்க, என்னோடு, எனக்குள், எனக்காக நீ வாழ மறுப்பது ஏன்?


இன்றே உன் ஆவி, ஆத்துமா சரீரத்தை

ஒப்புக்கொடு. உன்னோடு நானிருந்து பெரிய காரியங்களைச் செய்வேன்.


என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன் எனக்குள்_ _

சங் 42 : 11