தேவனுக்கே பெயரிட்ட பெண்-யார் இவள்?



முன்னே புலம்பி தவித்தவள்;

பின்னே பூரிப்பாய் துதித்தவள்;

முன்னே கண்ணீரோடு வந்தவள்;

பின்னே ஆனந்த களிப்பாய் திரும்பியவள்;

முன்னே மழலை இல்லாத மலடி ;

பின்னே மக்களை பெற்ற மகராசி;


யார் இவள்? நமக்கு RoleModel ஆன அன்னாள் அக்கா தான்.😊


👱 கணவர் - அதிகமாய் நேசிக்கும் கணவர் ; இரட்டிப்பான பங்கு கொடுத்த கணவர்; கவலையில் கரிசனையோடு விசாரிக்கும் கணவர்; இருப்பினும்; இதயத்திலோ மகிழ்ச்சிக்கு இடமே இல்லை. ஆனால், தேவ சமூகமோ தீர்வு அளித்து விட்டது.


அன்னாள் - தளர்ந்த நடை; தொய்ந்த முகம்; விரக்தியின் வார்த்தைகள்; கண்ணீர் ததும்பிய கண்கள் விண்ணப்பம் பண்ணும் முன் இருந்தவை.


கெம்பீர நடை; களை கட்டிய முகம்; மலர்ந்த கண்கள், நம்பிக்கையின் வார்த்தைகள் விண்ணப்பம் பண்ணிய பின் இருந்தவை.


☦ கர்த்தர் - அன்னாள் கேட்டது ஒரு குழந்தை, ஆண்டவர் கொடுத்ததோ அரை டசன். அதிலும் First is the Best (தீர்க்கதரிசி). நாம் கர்த்தருக்காக கொடுக்கும் எதுவாயினும் அவர் பலமடங்காய் திருப்பி கொடுப்பதை அந்நிய கண்கள் அல்ல; நம் கண்களே காணும். வெறுமையான உங்கள் நீண்ட நாள் காத்திருப்பு களிப்பாய் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


என் இருதயம் கர்த்தருக்குள் களிகூறுகிறது... I சாமு 2 : 1😇😇