சிலுவைப் பயணம்


கிறிஸ்தவனே!


சிலுவை என்பது செதுக்கப்பட்ட சிலையல்ல,மரத்தில் செதுக்கி வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்குவதற்கும் அல்ல;


சிலுவை என்பது மரணத்தைக் கிழித்து நித்திய பாதை திறந்த சத்திய வாசலின் திறவுகோல்;


சிலுவை என்பது கிறிஸ்தவர்களின் அடையாளச் சின்னம் அல்ல. அது நமக்கு அடைக்கலச் சின்னம்.


கிறிஸ்து, நமக்கு அடையாளம் காட்டிய வாழ்க்கை பாதை, இயேசு நடந்து வந்த ராஜபாதை, இயேசு கடந்து வந்த ஜீவ பாதை, நம்மை பரலோகம் கொண்டு சேர்க்கும் பரிசுத்த பாதை.


விசாலமான பாதை அல்ல; நெருக்கமான பாதை.


இந்தப் பாதையில் மனம்போல் பயணிக்க முடியாது, விருப்பம்போல் வித்தை காட்ட முடியாது. இதில் பயணிக்க நீதி, நியமங்கள் உண்டு. அடிமையைப் போல் தாழ்மை; மலையைப் போல் பொறுமை; சிலையைப் போல் சகிப்பு; இவையாவும் நாம் சுமக்க வேண்டிய சத்திய சிலுவை.


இந்த பாதையில் தான் பரிசுத்தவான்கள், நல்ல போராட்டம் -------- ஓட்டத்தை முடித்தார்கள். இவர்களுக்கெல்லாம் நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது.


"இந்த சிலுவை பயணத்துக்கு நாம் ஆயத்தமா என்பதை சிந்திக்கலாமே!


தன்னைத்தான் வெறுத்து-------- தன் சிலுவையை--------என்னை பின்பற்ற கடவன். மத்தேயு 16:24