ரெபேக்காள்



👩🏻 பாலைவனக்கப்பலுக்கு தண்ணீர் வார்த்தவள், குணசாலி என்பதால் குபேரவாழ்வு பெற்றவள்.


👩🏻 முன்னே, வாய்ப்பிறப்பை அறிவித்தவள்; பின்னே, வாழ்த்துதலோடு அனுப்பப்பட்டவள்;

இந்த முகவுரையோடு அறிமுகமாகி, மெய் விவாகத்திலெல்லாம், தற்போது, நினைவு கூறப்படுபவளாக, முத்திரை பதித்த பெண்.


👩🏻 அகமும், முகமும் மலர ஊழியரை உபசரிக்கிறவள்.


👩🏻 விருந்தோம்பலில் சிறந்ததோடு, தெய்வீக சுபாவம் உடையவள்.


👩🏻 "தாய்க்குப்பின் தாரம்" என்றபடி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவள்.


👩🏻 கொடுத்த பணியை மனப்பூர்வமாய், மனரம்மியத்தோடு செய்தவள்.


👩🏻 தேவதிட்டத்திற்கு, தன்னை அர்ப்பணித்து, திருமணத்துக்கு ok சொன்னவள் .


👩🏻 தேவநடத்துதலுக்கு, உடன்பட்டு, தைரியமாய் முடிவெடுத்தவள்.


👩🏻 அனைத்து காரியங்களையும், தேவசித்தப்படி செய்ததால் தானே, சீமாட்டியாய் வாழ்ந்தாள்.


👩🏻 ஆகவே, நாமும்கூட அக்கா ரெபேக்காளை, முன்மாதிரியாய் வைத்து, வெற்றி வாழ்க்கை வாழலாமே!