தேவனின் சிறப்பு


1. தேவன் மீனைப் படைக்க விரும்புகிறபோது தேவன் கடலோடு பேசினார்.


2. தேவன் மரங்களைப் படைக்க விரும்பியபோது தேவன் பூமியோடு பேசினார்.


3. தேவன் மனிதனைப் படைக்க விரும்பிய போது தேவன் தமக்குத் தாமே பேசினார்.


4. ஒரு வேளை நீரிலிருந்து மீனைப் பிரிப்போமானால் மீன் இறந்துவிடும்.


5. மரத்தை மண்ணிலிருந்து பிரிப்போமானால் மரம் இறந்து விடும்.


மனிதன் தேவனுடைய உறவை விட்டு பிரிவானானால் மனிதன் மரித்துவிடுவான்.

ஆகவே

நாம் தேவனுடைய உறவில் நிலைத்திருப்போம்.


மீன் இல்லாமல் நீர் அப்படியே இருக்கும்.ஆனால் நீர் இல்லாமல் மீன் ஒன்றும் இல்லை.

மரம் இல்லாமல் மண் அப்படியே இருக்கும். ஆனால், மண் இல்லாமல் மரம் ஒன்றும் இல்லை.

மனிதன் இல்லாமல் தேவன் அப்படியே இருப்பார். ஆனால் தேவன் இல்லாமல் மனிதன் ஒன்றும் இல்லை.