தெரிந்து கொள்வோமா!



நமக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல நமக்குள் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம்.


கால்களில் நடப்பதைவிட முழங்காலில் காத்திருப்பது நமது வாழ்க்கையின் குறியை சீக்கிரம் எட்டச் செய்துவிடும்.


வேண்டுதல் செய்யும் உதடுகள்; உதவி செய்யும் கரங்கள்; எதிரியை நேசிக்கும் இதயம்; இவைகளை நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார்.


வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை போடாதீர்கள் உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால், ஒரு துளி எண்ணெயை மூழ்கடிக்க முடிவதில்லை.


எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றம் பெரிதாகக் தெரியாது.


பெரிய கடலில் வலையைப் போட்டு வெறுமையாய் வந்தவர்கள் உண்டு- ஆனால் சிறிய அறையில் முழங்கால் போட்டு வெறுமையாய் வந்தவர்கள் உண்டோ?


உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இந்த மூன்றும் தான் நல்லவர்களின் அடையாளம்.


இன்பத்திலும், துன்பத்திலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று மட்டும்தான்; இந்த நிமிடமும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்.


சிங்கங்கள் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. நாமோ சுண்டெலிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம்.


சபைக்கு தேவன் கொடுத்த பணி என்பது காணக் கூடாத தேவனை உலகத்துக்கு காட்டுவதேயாகும்