நித்தியஜீவன்

கர்த்தர்:


நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் கேட்கிறார்.

நாம் செவிகொடுக்கும்போது கர்த்தர் பேசுகிறார்.

நாம் விசுவாசிக்கும்போது கர்த்தர் செயல்படுகிறார்.

நாம் ஜெபிக்க, ஜெபிக்க நம் சுபாவங்கள் மட்டுமல்ல, நம் சூழ்நிலையையும் நன்மையாக மாற்றுகிறார்.


சாத்தான்:


நாம் கிறிஸ்தவராக வாழும்போது சாத்தான் தூங்குவான்.

நாம் கிறிஸ்துவுக்காக வாழும் போது விழித்துக்கொள்வான்.

நாம் வேதம் வாசிக்கும்போது சாத்தான் சிரிப்பான்.

நாம் வேதத்தின்படி நடக்கும்போது சாத்தான் அழுவான்.

நாம் ஜெபிக்கும் போது சாத்தான் ஜெயிக்க துடிப்பான்.

நாம் ஜெபத்தினால் ஜெயிக்கும் போது சாத்தான் தோற்பான்.


நமது முயற்சிகளைக் கண்டு சாத்தான் சிரிக்கிறான். நமது மூளை அறிவைக் கண்டு சாத்தான் பரியாசம் செய்கிறான். ஆனால் நமது முழங்கால்களைக் கண்டால் சாத்தான் நடுங்குகிறான்.


சாத்தான் நம் கடந்த காலத்தைக் குறித்து ஞாபகப்படுத்தினால், நாம் அவன் எதிர்காலத்தைக் குறித்து ஞாபகப்படுத்துவோம், உன் முடிவு அக்கினி, என் முடிவு நித்தியஜீவன் - என்று.