பிறப்பிலும் .......... இறப்பிலும் : இயேசு
பிறப்பிலும் .......... இறப்பிலும் : இயேசு
முன்னணையும் - சிலுவையும்
தலைசாய்க்கும் பஞ்சுமெத்தைகள்,
பிறப்பும் கல்லில் வெட்டப்பட்ட முன்னணையில்
இறப்பும் கல்லில் வெட்டப்பட்ட கல்லறையில் ;
நட்சத்திரம் பிரகாசித்தால் அது பிறப்பு
சூரியன் இருளடைந்தால் அது இறப்பு ;
பிறப்பில் சத்திரத்தில் இடமில்லை
இறப்பில் சத்தியத்திற்கு இடமில்லை ;
பிறப்பிலே ஏரோது வஞ்சகம்
இறப்பிலே யூதாஸ் வஞ்சகம்
சாஸ்திரிகள் கொடுத்தனர் மூன்று பரிசுகள்
சேவகர்கள் கொடுத்தனர் மூன்று ஆணிகள் ;
உலகிலே............
நடக்காத அதிசயம்
நடக்க முடியாத அதிசயம்
இயேசுவின் "பிறப்பும் இறப்பும்" தானே!
பிள்ளையை முன்னணையில் கிடத்தினாள் (லூக்கா -2:7)
.............................. ஜீவனைவிட்டார் (லூக்கா -23:46)