🫀இதயத்திற்கு தேவைப்படும் துடிப்பைப்போல, நமக்கும் இடைவிடாமல் தேவைப்படுகிறது அவர் கிருபை.
🛐 அன்று முடங்கி மூலையில் இருந்தேன்; முடக்கினேன் முழங்காலை; இன்று மூலைக்குத் தலைக்கல்லாக்கிவிட்டார்.
🌄 அதிகாலை தூக்கம் தியாகம் செய்யப்பட்டால் தான் கிருபை நமக்கு கிரயமாகும்!
⏳ நாம் எப்பொழுதாவது ஜெபிக்க அல்ல; எப்பொழுதுமே ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
🏥 மனக்காயங்களுக்கு இன்னும் மருத்துவமனைகள் கட்டப்படவில்லை.
🍒 வரங்களை வைத்தல்ல பரலோகம்; கனிகளை வைத்தே பரலோகம் .
⚖️ வாலிபத்தை அடகு வைக்காதீர்கள். பின்னர் திருப்பமுடியாது.
😇 எல்லா நிலையிலும் பதில்தர தேவன் இருக்க எந்த நிலையிலும் ஜெபிக்க மறவாதே!