குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறு
🌿 அன்று எருசலேம் வீதிகளில் இயேசுவுக்கு வரவேற்பு விழா. அதுவே வழியனுப்பு விழாவாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்?
🌿 இயேசு மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தவர். சில நாட்களில் இரத்த வெள்ளத்தில் மிதப்பார் என்று யாருக்கு தெரியும்?
🌿 கட்டப்பட்ட கழுதைக்கு கட்டவிழ்க்கப்பட்டவுடன் வாழ்வு வரும் என்று யாருக்கு தெரியும்?
🌿 கழுதையால் சுமக்கப்பட்டவர், தள்ளாடி சிலுவையை சுமந்து வந்தவர் - ஆனாலும் சிலுவையை சுமக்க யாரும் வரமாட்டார்கள் என்பது யாருக்கு தெரியும்?
🌿 குருத்தோலை தெருவோரம் ஒதுங்கிக் கிடந்தது. அதன் மீது தேவாட்டுக் குட்டியின் இரத்தம் தெரித்துக் கிடந்தது அனைவரும் அறிந்தோமே!
❓🌿இப்பொழுதாவது நமக்குள் மாற்றம் வந்ததா? இல்லையா?
சற்று சிந்திக்கலாமே!