👨🏻🎊 தந்தையர் தினம்🎊👨🏻
👨🏻🎊 தந்தையர் தினம்🎊👨🏻
👨🏻 தந்தை என்பவர் கடவுளின் உன்னத படைப்பு. ஏன்? ஆண்டவர் ஆணைத் தானே முதலில் படைத்தார்.
👨🏻 10 மாதம் வயிற்றில் சுமப்பவள் தாய். நித்தமும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. பிள்ளைகளுக்காய் உழைத்து, கண்டித்து, கல்வி பெறச் செய்பவர் தந்தை.
👨🏻 உயரத்தில் கிளைகளாய் பிள்ளைகள் செழித்திருக்க, மரத்தின் ஆணிவேராய் தாங்குபவர் தந்தை. பாசத்தை தன்னுள் புதைத்து வைப்பவர் தந்தை.
👨🏻 பிள்ளைகளின் எதிர்காலம் எண்ணி கண்டிக்க தெரிந்தவர் தந்தை. குடும்பத்தின் முதுகெலும்பும் தந்தை தானே! முதுகெலும்பு பின்னால் தானே என எண்ணாது, அது இல்லையெனில் மனிதனின் நிலை...குடும்பத்தின் நிலை...அந்தோ!
👨🏻எல்லாவற்றிலும் ஜெபித்தே ஜெயமெடுப்பவர் தந்தை!
👍🏻 ஆகவே, தந்தையை போற்றுங்கள் ! பாராட்டுங்கள்!
😇 "உன் தகப்பன் கற்பனையை காத்துக்கொள்." நீதிமொழிகள் 6:20