🧕🏻யோப்பா பட்டணம் கதிகலங்க; விதவைகள் கண் கலங்க; சீஷர்கள் பரபரக்க; பேதுரு கைபிடித்து தூக்க; கண் விழித்தாள் அந்த சீஷி - யார்?
🧕🏻தருமம் தலை காக்கும். இவள் செய்த தருமம், மீண்டும் இவள் தலையைக் காத்து உயிர்பெறச் செய்தது - யார்?
🧕🏻சூப்பரான டெய்லருங்க; சுறுசுறுப்பாக தச்சாருங்க; நல்ல காரியம் செஞ்சாருங்க; நல்ல பெண்ணாய் வாழ்ந்தாருங்க - யார்?
🧕🏻யோசனை பல செய்பவள்; அங்கிகள் பல செய்பவள்; தருமம் செய்தவள்; மரித்தும் உயிர்த்து வந்தவள் - யார்?
🧕🏻இவளுக்கு பெயர் இரண்டுண்டு; இகத்தினில் வாழ்வும் இரண்டுண்டு; நண்பர்கள் வட்டம் உடணுண்டு - யார்?
👉🏻 விடை: தொற்காள்