கடந்து போன ஆண்டுகளில்..
சுனாமி வந்து சுருட்டினாலும்,
சிக்குன்குனியா வந்து சீரழித்தாலும், கோரபுயல் வந்து கோரத் தாண்டவமாடினாலும்,
கொரோனா வந்து கொடூரமாய் தாக்கினாலும்,
கர்த்தர் நம்மை கண்ணின் விழி போல காத்து, ஜீவனைக் கூட்டி கொடுத்தாரே! அதற்கு நாம் செய்தது என்ன?
இதோ சில கேள்விகள்...
கடந்த ஆண்டில்...
1.தேவ பிரசன்னத்தை அதிகமாய் உணர்ந்தீர்களா?
2.உங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டீர்களா?
3.வேதத்தை படித்து, வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தீர்களா?
4. தேவ திட்டத்தை அறிந்து செயல்பட்டீர்களா?
5. ஆவிக்குரிய வாழ்வில் ஒழுங்கு காணப்பட்டதா?
6.சபை ஊழியங்களில் பங்கு கொண்டீர்களா?
7.உங்களால் நேசிக்க முடியாதவர்களை நேசித்தீர்களா?
8. அவிசுவாசிகள் ஒப்பிடும்போது நாம் வித்தியாசமானவர்களா?
9.தேவ தொடர்பு உங்களை மகிழ்ச்சி அடையச் செய்ததா?
10.கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் நன்றியோடிருக்கிறீர்களா?
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமா...!!!