✨✨ இன்றும் ஜீவிக்கிறார்✨✨
✨✨ இன்றும் ஜீவிக்கிறார்✨✨
✨ பாவிகளை குணமாக்க வந்தவரை பணமாக்க திட்டமிட்டான் யூதாஸ். அற்ப வெள்ளிக்கு ஆசைப்பட்டு விடிவெள்ளியை முப்பது வெள்ளிக்கு விலைபேசி முற்றுப்புள்ளி வைத்தான்.
✨ கட்டுண்டவர்களை கட்டவிழ்க்க வந்தவர், கட்டுண்டவராய் நின்றார். விசாரணை அம்புகள் விதவிதமாய்த்தாக்கின, கடவுளின் உதடுகள் மெளனத்தையே காத்தன.
✨ பாவத்தின் நிவாரணமாய் வந்த தேவாட்டுக் குட்டியை கள்வனைப் போலல்லவா இழுத்துச் சென்றனர். சமாதானம் செய்ய வந்தவரை அவமானம் செய்தனர்.
✨ சிங்காசனம் துறந்து சிலுவை ஆசனம் ஏறினார். சொல்லொண்ணாத் துயர் அடைந்து உயிர் நீத்தார். மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பரமேறினார்.
😇 "அவர் உயிர்த்தெழுந்தார்..." லூக்கா 24:6