🌅 புதியதோர் ஆண்டு புதிதாய் பூத்திருக்கிறது. கடந்து போன ஆண்டின் தீர்மானங்கள் தொடர்கதையா? நிறைவேறாத கனவுகளா?
🕐 ஒருபோதும் ஓயாத கடிகார முட்களை போல ஓடி ஓடி உழைத்தோம் உலக வேலை செய்ய. ஆனால், புத்தாண்டிலோ கர்த்தரின் கரம் பிடித்து ஓடி, ஓடி செய்வோம் ஊழியந்தனை.
😷 கொள்ளை நோய், விபத்து, பூமி அதிர்ச்சி அள்ளிச் செல்கின்றன மனித உயிர்களை . அதனால், நாமோ இரண்டாம் வருகைக்காய் துரிதமாய் தூவிடுவோம் சுவிசேஷ விதைகளை.
🙏🏻 இலட்சங்கள் கையில் இல்லாவிட்டாலும், இலட்சியங்களை இதயத்தில் தந்து, இரட்டிப்பான அபிஷேகத்தை தந்து, உலக சிநேகம் உருண்டோட ,மாமிச சுபாவங்கள் மறைந்து போக, எப்பொழுதுமே நம்மோடு இருக்கும் இம்மானுவேலருக்கு நன்றி பலி செலுத்துவோம்.
😇 வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர்... சங்கீதம் 65:11