☦️ ஒருவன் சபித்தான்; ஒருவன் ஜெபித்தான்; ஒருவர் வாக்குப்பண்ணினார்.
☦️ ஒருவன் ஆக்கினைக்குள் மரித்தான்; ஒருவன் மன்னிக்கப்பட்டவனாய் மரித்தான்; ஒருவர் குற்றமற்றவராக மரித்தார்.
☦️ ஒருவன் பாவத்தினால் மரித்தான்; ஒருவன் பாவத்துக்கு மரித்தான்; ஒருவர் பாவத்திற்காக மரித்தார்.
☦️ ஒருவன் ஜீவனை இழந்தான்; ஒருவன் ஜீவனை சுதந்தரித்துக்கொண்டான்; ஒருவர் ஜீவனாகவே இருக்கிறார்.
☦️ மேலும் இயேசு பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை; கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை; குருதி சிந்தி பாடுபட்டு மறுதலிக்கவில்லை; மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை; யாருக்காக? எல்லாமே நமக்காக! நம்மில் கொண்ட அன்புக்காக!
இவைகள் எல்லாம் சற்று சிந்திக்கலாமே!
(யோவான் 19:18)