🍁 கீழே போட்டால் ஊர்வான் வாலைப் பிடித்தால் நிமிர்வான். அது என்ன?
மோசேயின் கோல் (யாத்திராகமம் 4:3)
🍁 மோசே, அற்புத அடையாளங்களைச் செய்ய பயன்படுத்தயது - கோல்.
🍁 ஆரோன், மந்திரவாதிகளின் கோலை விழுங்க பயன்படுத்தியது - கோல்.
🍁 மோசே, தண்ணீர் இரத்தமாய் மாற பயன்படுத்தியது - கோல்.
🍁 பூமியின் புழுதி, பேன்களாய் மாற பயன்படுத்தப்பட்டது- கோல்.
🍁 சமுத்திரம் பிளந்து, வெட்டாந்தரையாய் மாற பயன்பட்டது - கோல்.
🍁 உலர்ந்தது, ஒன்றுக்கும் உதவாதது துளிர் விட்டு, பழங்களை தந்தது - கோல்.
🍁 ஆடுகளை வழிநடத்த மட்டுமல்ல, அற்புதங்களையும் நடத்த பயன்பட்டது- கோல்.
🍁 பலமுள்ள பாரோன் பார்க்க, சாதாரண கோல் அசாத்தியமானவைகளை செய்ய காரணம், நம் கர்த்தர். ஆகவே, சாதாரணமான நம்மையும் அசாதாரணமானவர்களாய் மாற்ற அவர் ஒருவரால் மட்டுமே முடியும். எப்போது?
அவரை பிரதிபலித்து காட்டும் போது மட்டுமே!!😇😇