அன்புப் பிள்ளைகளே! Are you all ready?
அன்புப் பிள்ளைகளே! Are you all ready?
💐 வெற்றி வாகை சூடி, புத்தகம் என்னும் கிரீடத்தை கையில் ஏந்தி, புது கல்வி ஆண்டிற்குள் நுழையப் போகும் அன்பு செல்வங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்!
புது வகுப்பு, புது ஆசிரியர், புது நண்பர்கள், புது புத்தகங்கள் ஏன்? நீங்களும் புதியவர்கள் தானே!
🫵🏻 செயல்படுத்த வேண்டியவை:
📖 பள்ளிக்கு ஒழுங்காக சீருடை அணிந்து போவதைப் போல், பாதைக்கு வெளிச்சம் தரும் வேத வசனத்தை படித்த பின்னரே பள்ளி செல்லுங்கள்.
📚 அன்றைய பாடங்களை அன்றே படித்து விடுங்கள். நாளை என தள்ளிப் போடாதீர்கள்! நாளை என்பது நமதல்ல!
🙏🏻ஆசிரியர்களிடம் மரியாதை, மாணவர்களிடம் அன்பு செலுத்துங்கள்.
🤝 உடன்பயிலும் ஏழைப் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.
❤️ அனைவரையும் சமமாய் நேசியுங்கள்.
👍🏻 ஆண்டவரின் பிள்ளை என்பதை பிரதிபலித்துக் காட்டுங்கள்.
📖 அன்பு பெற்றோரே! இந்தக் கல்வி ஆண்டில் பாடப் புத்தகம் மட்டுமல்ல வேத புத்தகமும் வாங்கிக் கொடுத்து படிக்க தூண்டுங்கள்!
😇 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்... சங்கீதம் 16:8