கிறிஸ்தவனே!
☦️ சிலுவை என்பது செதுக்கப்பட்ட சிலையல்ல; மரத்தில் செதுக்கி வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்குவதற்கும் அல்ல.
☦️ சிலுவை என்பது மரணத்தை கிழித்து, நித்திய பாதை திறந்த சத்திய வாசலின் திறவுகோல்.
☦️ கிறிஸ்து நமக்கு அடையாளம் காட்டிய வாழ்க்கை பாதை; இயேசு நடந்து வந்த ராஜ பாதை; இயேசு கடந்து வந்த ஜீவ பாதை; நம்மை பரலோகம் கொண்டு சேர்க்கும் பரிசுத்தப் பாதை.
☦️ இது விசாலமான பாதை அல்ல; நெருக்கமான பாதை. இந்தப் பாதையில் மனம் போல் பயணிக்க முடியாது. விருப்பம் போல் வித்தை காட்ட முடியாது. இதில் பயணக்க நீதி, நியமங்கள் உண்டு. அடிமையைப் போல் தாழ்மை; மலையைப் போல் பொறுமை; சிலையைப் போல் சகிப்பு. இவை யாவும் நாம் சுமக்க வேண்டிய சத்திய சிலுவை!!
☦️ இந்தப் பாதையில் தான் பரிசுத்தவான்கள் நல்ல போராட்டம்...ஓட்டத்தை முடித்தார்கள். இவர்களுக்கெல்லாம் நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது.
☦️ இந்த சிலுவைப் பயணத்துக்கு நாம் ஆயத்தமா என்பதை சிந்திக்கலாமே!
😇 தன்னைத் தான் வெறுத்து...தன் சிலுவையை...என்னை பின்பற்றக்கடவன்
(மத்தேயு 16:24)