✨ சிந்தனைக்கு சில வரிகள் ✨
✨ சிந்தனைக்கு சில வரிகள் ✨
✨ அன்பும், உண்மையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
✨ நம்மை நேசிப்பவர்களுக்காக வாழ வேண்டும்; நம்மை வெறுப்பவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்.
✨ ஒரு குருடனுக்கு கண் தெரிந்துவிட்டால், முதலில் அவன் தூக்கிப்போடுவது அவனுக்கு துணைநின்ற கைத்தடியைத்தான்; இதுதாங்க வாழ்க்கை.
✨ தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை; செய்த தவறு வெளியே தெரிந்துவிடுமோ என்றே பயப்படுகிறோம்.
✨ வாழ்க்கையில் உயரப்பறக்க நினைப்பது தவறல்ல; உடனே பறக்க நினைப்பது தான் தவறு.
✨ வேர்கள் உறுதியாகிவிட்டால் வீசும் காற்றுக்கு அஞ்சத் தேவை இல்லை.