"மெளனம்" என்ற வார்த்தையின் அர்த்தம்:
1.பெண்பார்க்கும் படலத்தில், கேட்கப்படும் கேள்விக்கு பெண்ணின் மௌனம்- சம்மதம்.
2.நேசித்த உறவுகளை பிரியும்போது மௌனம் - துன்பம்.
3.தெரியாமல் தவறு செய்யும் போது ஏற்படும் மெளனம் - பயம்.
4.தோல்வியில் வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம்- பொறுமை.
5.பிடிக்காத விஷயங்களை ஒத்துக் கொள்ளாத போது ஏற்படும் மௌனம்- எதிர்ப்பு.
6. ஆசைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் போது மௌனம்- எதிர்பார்ப்பு.
கடவுளின் மௌனம் கண்கலங்க வைக்கலாம், காத்திருந்து பார்; அவர் மெளனம் கலைத்துப் பேசும்போது, மரணம் கூட, கண்ணை மூடிக்கொண்டு கதவைத் திறக்கும்.
எதுவும் பேசாமல் 4 நாள் இருந்து விட்டு, இப்போது பேசுகிறார்; லாசருவே வெளியே வா...
"இயேசுவோ பேசாமலிருந்தார்". மத்தேயு 26:63