👉🏻 ஆசிரியர்களே ஹீரோக்கள்:
👉🏻 சாக்ரடீசின் மாணவர்- பிளேட்டோ;
👉🏻 பிளேட்டோவின் மாணவர்- அரிஸ்டாட்டில்;
👉🏻 அரிஸ்டாட்டிலின் மாணவர் - மகா அலெக்ஸாண்டர்.
என்ன ஒரு சரித்திரம் படைத்த செழுமையான ஆசிரியர் பரம்பரை!
🌎 உலகில் புனிதமான இடங்கள் இரண்டு :
1. தாயின் கருவறை,
2. ஆசிரியரின் வகுப்பறை
👩🏻🏫 தாயின் கருவறையில் ஒருவன் உயிர் பெறுகிறான்; ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
👨🏻🏫 குறும்புகளை ரசித்து, குழப்பங்களை தீர்த்து, தவறுகளை தவிர்த்து, தோல்வியை பழக்கி, வெற்றிக்கு வழிவகுத்து, பொறாமையின்றி பெருமை பாராட்டி வாழ்த்துவது ஆசிரியர் மட்டுமே!
👩🏻🏫 மேலும், அறிவில் கூர்மையாய், ஆர்வத்தோடு போதித்து, இன்சொல் நெறிகாட்டி, ஈடில்லா வழிகாட்டி, உலக அறிவூட்டும் உத்தமர், ஊக்குவிக்கும் வித்தகர் எதையும் தெளிவுப்படுத்தும் வல்லவர், ஏணியாக விளங்குபவர், ஐயம் போக்கும் அறிவொளி, ஒளியூட்டும் ஒளி விளக்கு, ஓதி ஓதி தன்னையே தியாகம் செய்பவர், ஒளவைக்கு ஒப்பாய், எஃகு போல் தன்னையே வனைபவர்!
😇 பெற்றெடுக்காமலே "என் பிள்ளைகள்" எனக் கூறும் உரிமை ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு!!