உலக புகழ்பெற்ற ஒருவர் மரணத்தருவாயில் (புற்றுநோய்) எழுதிய கடைசி வார்த்தை: "எல்லாம் மாயை".
உலகத்திலே விலை உயர்ந்த கார் (பிராண்ட்) என்னிடம் உள்ளது. ஆனால் இன்று நானோ சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படுகிறேன்.
உலகிலே விலை உயர்ந்த ஆடைகளையே அணிவேன். ஆனால் இன்று சிறிய கவுணில் (Frock) தான் இருக்கிறேன்.
நான் வாழ்ந்ததோ அரண்மனையில் தான். ஆனால் இன்று மருத்துவமனையில் சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
தினமும் என் முடியை சிகை அலங்காரம் செய்ய ஏழு பேர். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை.
தனியாக ஜெட்டில் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வர இரண்டு ஆள் தேவைப்படுகிறது.
எனக்கு நிம்மதி ஆறுதல் என்பது சில அன்பானவர்களின் முகமும், ஜெபமும் தான். அதுவே என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். சங்கீதம் 39:5
மாயை! மாயை! எல்லாம் மாயை... பிரசங்கி 12:8